சாட்டிங் செயலியில் கொடிகட்டிப் பறக்கும் வாட்ஸ்அப், வாடிக்கையாளர்களைக் கவர அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது.
சாட்டிங்கில் டைப் செய்வதைக் காட்டிலும் ஸ்டிக்கர் அனுப்பி விளையாடுவதைத் தான், பெரும்பாலான இளைஞர்கள் செய்கின்றனர். இருப்பினும், சரியான ஸ்டிக்கரை தேடுவது பயனாளர்களுக்குச் சிரமமாகவே இருந்து வந்தது.
அதனைச் சரிசெய்யும் விதமாக, ஸ்டிக்கர் சேர்ச் ஆப்சனை வாட்ஸ்அப் நிறுவனம் ஐஓஎஸ் இயங்குதளத்திற்குச் சோதனை முயற்சியாக களமிறக்கியுள்ளது. ஐபோன் வெர்ஷன் 2.21.120.9-க்கான வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த வசதியை பெற முயற்சிக்கலாம்.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டிக்கர் சேர்ச் வசதி ஏற்கனவே வாட்ஸ்அப்பில் இடம்பெற்றாலும், தற்போது அவை எளிமையாக்கப்பட்டுள்ளது.
ஸ்டிக்கர் லைபிரரியில் நீங்கள் தேவைப்படும் ஸ்டிக்கருக்கான சொல்லை டைப் செய்ததும், உடனடியாகத் தேடி ஸ்டிக்கரின் பரிந்துரையை வாட்ஸ்அப் காட்டுகிறது.
வாட்ஸ்அப்-இல் டிஃபால்ட்டாக உள்ள ஸ்டிக்கர்களுக்கு மட்டும் இந்த வசதியை ஆதரிக்கின்றன. புதிதாக, நான் இன்ஸ்டால் செய்யும் ஸ்டிக்கர்களில் இந்த வசதி வேலை செய்யாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'பிரைவசிக்கு முக்கியத்துவம்' - ஐபேட் ஓஎஸ்15இன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?