தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவதில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக பேமென்ட் பேக்கிரவுண்ட் (Payments Backgrounds) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

WhatsApp
வாட்ஸ்அப்

By

Published : Aug 17, 2021, 7:51 PM IST

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப், அவ்வப்போது வாடிக்கையாளர்களைக் கவர புதிய வசதிகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக பேமென்ட் பேக்கிரவுண்ட் ('Payments Backgrounds') வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியானது, வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்குப் பணம் அனுப்பும் போது, அதனுடன் பேமென்ட் பேக்கிரவுண்ட் வசதியை இணைத்திட முடியும். இதன்மூலம் நமது உணர்வுகளைப் பணம் அனுப்பும் போது, அதனுடன் சேர்த்துத் தெரிவிக்க முடிகிறது.

இந்தியர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேமென்ட் பேக்கிரவுண்ட் வசதி

உதாரணமாக, நண்பர்களுடன் உணவு அருந்திய பிறகு, பில் பணத்தைப் பிரித்துக் கொடுக்கும் போதும், அன்பின் அடையாளமாக நெருங்கியவர்களுக்குப் பரிசு அளிக்கும் போதும், நாம் செய்யும் பேமென்ட்-வுடன் நமது உணர்வையும் பேக்கிரவுண்ட் எடிட் மூலம் தெரிவிக்க முடிகிறது.

முன்னதாக, வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்குப் புகைப்படம் அல்லது வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Ola electric scooters - ஸ்டைல், லுக், டெக்னாலஜி, வசதி என அசத்தும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ABOUT THE AUTHOR

...view details