சான் பிரான்சிஸ்கோ: பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையில்லாத பின்னூட்டங்களைத் தடுக்க ட்விட்டர் புதிய அம்சத்தை உருவாக்கி சோதனை செய்துவருகிறது.
தேவையில்லாத பின்னூட்டங்களைத் தடுக்க புதிய அம்சத்தை நிறுவும் ட்விட்டர்! - Users to soon select who can reply to their tweets
ட்விட்டர் ஒரு புதிய அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது. பயனர்கள் தங்கள் உரையாடல்களில் யார் பங்கேற்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய இது உதவுகிறது. உங்கள் கைபேசியில் ட்விட்டர் பயன்பாட்டைத் திறந்தால், பிறர் உங்கள் ட்வீட்டுகளுக்குப் பதிலளிக்க முடியுமா, இல்லையா என்பதை இதன்மூலம் நீங்கள் தேர்வுசெய்ய முடியும்.
twitter new update
என்னென்ன மாற்றங்கள் பயனர்களுக்குக் கிடைக்கும்:
தனது புதிய MIUI 12 பயனர் இயங்கு தளத்தை வெளியிட்டது சியோமி!
- இதன் மூலம்; (அனைவரும், நான் தொடருபவர்கள், நான் சுட்டிக்காட்டிய கணக்குகள்) என்ற மூன்று கோணத்தில் நமது பின்னூட்டங்களைக் கட்டுப்படுத்த முடியும்
- பின்னூட்டத்தின் கட்டுப்பாடுகள், அதனை பதிவுசெய்ய முயற்சிப்போருக்கு தெளிவான வண்ணங்களில் ஆன ஐகான் மூலம் காட்சியளிக்கும்.
- பின்னூட்டம் இட முடியாதவர்கள், தொடர்ந்து பதிவுகளைக் காணவும், அதனை மறுபதிவு செய்யவும் முடியும்.
- இந்த அம்சத்தினை சில கூகுள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களிடத்தில் ட்விட்டர் நிறுவனம் சோதனை செய்து வருகிறது.