சான் பிராசிஸ்கோ: மைக்ரோ-ப்ளாகிங் தளமான ட்விட்டரின் 'ஸ்பேஸ்' தளத்திற்கு புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
இப்போது பயனர்கள் ஸ்பேஸ் தளத்திலிருந்தே புதிய ட்விட்டர் பதிவை உருவாக்கமுடியும். இது பயனர்கள் பதிவிடும் ட்விட்டர் பதிவில் ஸ்பேஸ் ஒலிப்பதிவுடன், சம்பந்தப்பட்ட ஹேஷ்டேகுகளை சார்ந்து பதிவேற்றப்படும்.
நத்திங் இயர்பட்ஸ் - ஆகஸ்ட் 17 முதல் நேக்கட் கருவியை விற்கிறது பிளிப்கார்ட்
இதனை பயனர்கள் ஹேஷ்டேகுகளைக் கொண்டு, ட்விட்டர் தேடுபொறியில் தேடி பெறமுடியும். ஐஓஎஸ் பயனர்களுக்கு கூடுதல் சிறப்பாக, 'கெஸ்ட் மேனேஜ்மெண்ட்' என்ற அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யான் ஸ்பேஸ்.இல் இணையலாம், யாரெல்லாம் பேசலாம் என்பதனை நிர்வகிக்க முடியும்.
ட்விட்டர் ஸ்பேஸ் தளத்திற்கு நேரடி போட்டியாளராகக் கருதப்படும் 'கிளப் ஹவுஸ்' தளம், நேரலை உரையாடல்களில், இணைய கட்டணம் செலுத்தி 'டிக்கெட்' வாங்கும் நடைமுறையை தற்போது அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.