கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இம்மாதம் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வழிவகை செய்யும் வகையில், தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட ஆறு இந்திய மொழிகளில் ஒன்பது வகையிலான எமோஜிக்களை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த எமோஜிக்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளுடையை லோகோக்களைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் இந்தியாவின் இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பலமும்...! பலவீனமூம்...! சென்னை சூப்பர் கிங்ஸ்