தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ள டிக்-டாக்!

டிக்-டாக் தளத்தை 45 நாட்களுக்குள் தங்களிடம் விற்கவேண்டும், இல்லையேல் அதற்கு தடை விதிக்கப்படும் என்று ஆகஸ்ட் 6ஆம் தேதி டிரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து, அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

டிக் டாக்
டிக் டாக்

By

Published : Aug 26, 2020, 8:04 PM IST

வாஷிங்டன்:டிக்-டாக் மீது தடைவிதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டிருந்த தருணத்தில், அதற்கு எதிராக தாய் நிறுவனமான பைட்-டான்ஸ் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் உள்பட பல்வேறு செயலிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்தியா தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கவுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆகஸ்ட் 6ஆம் தேதி டிரம்ப் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு டிக்-டாக்அச்சுறுத்தலாக உள்ளது. அரசு ஊழியர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கவும், தகவல்களை சேகரித்து மிரட்டவும், உளவு பார்க்கவும் இந்த செயலியை சீனாவால் பயன்படுத்த முடியும். எனவே 45 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு அதை விற்க வேண்டும். இல்லையேல் அதற்கு தடை விதிக்கப்படும்” எனக் கெடு விதித்திருந்தார்.

இச்சூழலில் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டிக்-டாக் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் டிரம்ப், வர்த்தகச் செயலாளர் வில்பர் ரோஸ் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிபர் டிரம்பின் தீவிர நடவடிக்கையை நியாயப்படுத்த எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அமெரிக்க அலுவலர்கள் நிறுவனத்தின் உரிமைகளை பறிப்பதாக பைட்-டான்ஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details