தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

'டிக்டாக் அமெரிக்க நிறுவனமாகச் செயல்பட்டால் தடை இல்லை'

59 சீனச் செயலிகளைத் தடைசெய்தது மத்திய அரசு. இச்சூழலில் அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க தொடங்கின. இவ்வேளையில் டிக்டாக் தனது தாய் நிறுவனமான பைட் டான்ஸிலிருந்து வெளியேறி அமெரிக்க நிறுவனமாக மாற வேண்டும் என வெள்ளை மாளிகை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

America company
America company

By

Published : Jul 18, 2020, 6:17 PM IST

வாஷிங்டன்:அமெரிக்க நிறுவனமாக டிக்டாக் செயல்பட்டால், அதன் மீதான தடைகளுக்கு அவசியமில்லை என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோ தெரிவித்துள்ளார்.

”சீனாவில் இயங்கும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தைத் துறந்து, அமெரிக்காவில் தலைமையகத்தை அமைத்து இங்கு செயல்பட்டால், டிக்டாக்கின் தனிப்பட்ட வளர்ச்சி இன்னும் மேலோங்கும். தனியுரிமை தகவல்கள் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தங்களின் சர்வர்களை இங்கு அமைக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும், சீனச் செயலிகள் தடை குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details