தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

அத்தியாவசியப் பொருள்களை டெலிவரி செய்ய களத்திலிறங்கும் ஸ்விகி

ஊரடங்கைத் தொடர்ந்து நாடு முழுவதும் 125 நகரங்களில் அத்தியாவசியப் பொருள்களை ஸ்விகி டெலிவரி செய்யவுள்ளது.

Swiggy
Swiggy

By

Published : Apr 18, 2020, 5:13 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே, ஆன்லைன் மூலம் உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் ஸ்விகி, அத்தியாவசியப் பொருள்களை டெலிவரி செய்ய களமிறங்கியுள்ளது.

முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 125 நகரங்களில் இதை சோதனை முயற்சியாக ஸ்விகி மேற்கொள்ளவுள்ளது. இதுகுறித்து ஸ்விகியின் நிர்வாக இயக்குநர் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவின்போது பொதுமக்கள் முடிந்த வரை வீட்டில் இருக்க வேண்டும். இதை ஊக்குவிக்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்களை டெலிவரி செய்ய நாங்கள் முடிவெடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 9 லட்சம் முகக்கவசங்களை வழங்கிய விவோ!

ABOUT THE AUTHOR

...view details