தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

Google Maps: உங்கள் அருகில் நடப்பதை தேடித்தரும் கூகுள் வரைபடத்தின் புதிய அம்சம்! - கூகுள் வரைபடம்

அமெரிக்கா: கூகுள் வரைபடம் தனது புதிய அம்சமான பொது நிகழ்வுகள் (Public Event) பிரிவை, அனைத்து பயனர்களுக்கும் வழங்கிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

கூகுள் வரைபடம்

By

Published : Mar 27, 2019, 11:46 AM IST

கூகுள் வரைபடம், திறன்பேசி பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக இருந்து வருகிறது. அவ்வப்போது பயனர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப கூகுள் நிறுவனம் இச்செயலியை மேம்படுத்தி வருகிறது. அதில் ஒரு சிறப்பம்சம் தான் பயனர்களின் பங்களிப்பு எனப்படும் ‘contribution’.

இப்பயனர்களில் பங்களிப்பு மூலம், நாம் அறிந்த தகவல்களை வரைபடத்தில் பதிவேற்றிக்கொள்ள முடியும். இப்படிப் பெறப்படும் தகவல்கள் வேறு பயனர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, தகவல்களின் நம்பகத்தன்மையைச் செயற்கை நுண்ணறிவு மூலம் கூகுள் உறுதி செய்துகொள்ளும்.

இவ்வாறு மேம்படுத்தப்பட்ட கூகுள் வரைபடத்தில் ‘பொது நிகழ்வுகள்’ எனும் அம்சத்தைக் கூகுள் நிறுவியிருந்தது. அதை அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இப்போது பயனர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் கூகுள் அனைவருக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்தியுள்ளது.

பொது நிகழ்வுகள் (Public Event) எனப்படும் அம்சமானது, அவரவர் இடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவேற்றவும், தாங்கள் இருக்கும் இடத்தில் பிறர் பதிவேற்றிய நிகழ்வுகளைஎளிதில் தெரிந்துகொள்ளவும் முடியும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் விரும்பிய, தங்களுக்கு அருகாமையில் நிகழும் நிகழ்வுகளை ஒரு சொடுக்கில் அறிந்து கொள்ளலாம்.

ABOUT THE AUTHOR

...view details