தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

வாட்ஸ்அப் செயலியின் உள்ளேயே ஷேர்சாட் காணொலிகளை கண்டு களிக்கலாம்!

டிக்டாக் தடைக்கு பிறகு இந்தியாவின் சிறு காணொலிகள் பகிர்வு தளங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளன. அதன் விளைவாக ஷேர்சாட் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் பல கோடி ரூபாய் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது. இச்சூழலில் வாட்ஸ்அப் செயலியில் ஷேர்சாட் இணைப்புகளை கொண்டு, செயலியில் இருந்து வெளியேறாமல் காணொலிகளை கண்டுகளிக்கலாம் என்ற அம்சம் நிறுவப்பட்டுள்ளது.

ShareChat
ShareChat

By

Published : Aug 8, 2020, 3:04 PM IST

டெல்லி: ஷேர்சாட் செயலியானது தமிழ், மலையாளம், குஜராத்தி, மராட்டி, பஞ்சாபி, தெலுங்கு, பெங்காலி, ஒரியா, கன்னடா, அசாமி, ஹரியானி, ராஜஸ்தானி, போஜ்புரி, உருது, இந்தி ஆகிய 15 இந்திய மொழிகளில் செயல்பாட்டில் உள்ளது.

வாட்ஸ்அப் செயலி தனது ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் பீட்டா பதிப்புகளில் ஷேர்சாட் காணொலிகளை பார்க்கும் வசதியை வழங்குகிறது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 2.20.81.3, ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.197.7 பதிப்புகளில் ஷேர்சாட் காணொலிகளை இணைப்புகளின் மூலம் செயலியை விட்டு வெளியேறாமல் காணமுடியும்.

ஷேர் சாட் செயலியில், 750 கோடி முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்!

முன்னதாக, இதே வசதி யூடியூப், ஃபேஸ்புக் காணொலிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் இயங்குதளங்களின் புதிய வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளில் இந்த அம்சமானது சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் ஷேர்சாட் காணொலி பகிரப்பட்டால், அதனை பார்க்க கோரும் பிளே பட்டன் இடம்பெறுகிறது. அதனை சொடுக்கியதும் காணொலி பிக்சர் இன் பிக்சர் பயன்முறை மூலம் இயங்கும்.

ABOUT THE AUTHOR

...view details