கோவிட்- 19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 5,800க்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இருப்பினும் ஒருவருக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை விரைவில் கண்டறிய உதவும் கருவிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் புனேவைச் சேர்ந்த ஃபாஸ்ட்சென்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், கரோனா வைரஸ் தொற்றை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிய உதவும் இரு கருவிகளை உருவாக்கியுள்ளது.
இதற்கு மத்திய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி வழங்கியுள்ளது. இது குறித்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறுகையில், "கோவிட்-19 வைரஸ் தொற்றை உறுதிப்படுத்தும் சோதனைகளில் வேகம், செலவு, துல்லியம் ஆகியவை கடும் சவால்களாக உள்ளன.