கோவிட் 19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஆயிரத்தை நெருங்குகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்களும் நிறுவனங்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டாடா சார்பில் ரூ. 1,500 கோடி நிதியுதவி அளிக்கப்படுள்ளது. அதேபோல நடிகர் அக்ஷய்குமாரும் ரூ. 25 கோடி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல ஈ-காமர்ஸ் செயலியான பேடிஎம் நிறுவனம் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 500 கோடி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.