உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேபால் (PayPal), இந்தியாவில் அதன் உள்ளூர் செயல்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உள்நாட்டு கட்டண (Digital Payment) சேவைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இனி பேபால் கணக்கை பயன்படுத்த முடியும்.
கடந்த 2017ஆம் ஆண்டு, இந்தியாவில் நிதி சேவையை தொடங்கிய பேபால், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் தனது நிறுவனத்தை தொடங்கியது. இந்த வலைத்தளத்தின் உதவியுடன், எந்தவொரு நபரும் சர்வதேச அளவில் எளிதில் பரிவர்த்தனை செய்யலாம்.