மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்பது இணையதளத்தில் பயன்படுத்தும் இமெயில், காண்டாக்ட் டாஸ்க் மற்றும் காலண்டர் சேவைகள் கொண்டது. இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களிலும் உபயோகிக்க மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு புதிய வசதிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் அவுட்லுக்கின் மொபைல் வெர்ஷனில் புதிதாக கார்ட்டனா (Cortana) என அழைக்கப்படும் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியை அறிமுகம் செய்துள்ளது.