தமிழ்நாடு

tamil nadu

மெசஞ்சர் ரூம் - சோதனை செய்கிறது வாட்ஸ் அப்... பயனர்கள் குதுகலம்!

By

Published : May 18, 2020, 6:56 PM IST

ஃபேஸ்புக் நிறுவனம் ஏப்ரல் மாதம் மெசஞ்சர் ரூம்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. தற்போது இந்த அம்சத்தை ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் தளத்திலும் அறிமுகம் செய்யவுள்ளது. மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் ஒரே நேரத்தில் 50 பேர் கொண்ட குரூப் வீடியோ கால் அழைப்பை பயன்படுத்த அனுமதிக்கிறது.

whatsapp new feature
whatsapp new feature

இது தொடர்பான வாட்ஸ்அப்-இன் அறிக்கையில், ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பீட்டா 2.20.163 வெர்ஷனில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தை வாட்ஸ்அப் தளத்தில் ஒருங்கிணைத்துள்ளது. இந்த புதிய பதிப்பு சாட் மெனுவில் உள்ள பகிர் தெரிவிக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய "மெசஞ்சர் ரூம்ஸ்" விருப்பம் கேலரி மற்றும் டாக்குமெண்ட் ஆப்ஷன்களுக்கு மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் ஒரேநேரத்தில் 50 நபர்களுடன் குரூப் வீடியோ அழைப்பை பயன்படுத்த ஒரு சாட் ரூம் அறையை உருவாக்க மெசஞ்சருக்கு உங்களை வழிநடத்துகிறது. இதுமட்டுமின்றி, மெசஞ்சர் ரூம்ஸ் அறையை உருவாக்குவதற்கான ஷார்ட்கட் ஆப்ஷன்கள், கால்ஸ் டேப் போன்ற வாட்ஸ்அப்பின் பிற பகுதிகளிலும் காணப்படுவதை, வாட்ஸ் அப் அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

பங்குதாரர்கள் 25 விழுக்காடு தொகையை மட்டும் கொடுத்தால் போதும்! - ரிலையன்ஸ்

இந்த புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தை முயற்சித்துப் பார்க்க நீங்கள் விரும்பினால், அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் பீட்டா பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் அல்லது நம்பகமான மூலத்திலிருந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான வாட்ஸ்அப் பீட்டா 2.20.163 வெர்ஷனின் APK பைலை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆனால், எப்பொழுதும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலிருந்து நம்பகத்தன்மையான அசல் APK பைலை பதிவிறக்கம் செய்வதே நல்லது.

நீங்கள் உருவாக்கியுள்ள சாட் ரூமில் மற்றவர்களை இணைக்க உங்கள் காண்டாக்டிற்கு சென்று நீங்கள் விரும்பும் நபர்களுக்கு சாட் ரூம் லிங்கை ஷேர் செய்தால் போதும். அந்த லிங்கை கிளிக் செய்து மற்றவர்களும் இணைந்துகொள்ளலாம். இதன் சிறப்பே ஃபேஸ்புக் கணக்கு இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் உங்கள் வீடியோ அழைப்பில் இணையலாம் என்பது தான்.

ABOUT THE AUTHOR

...view details