டெல்லி: மேம்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், கல்வி வளத்தை அதிகரிப்பதற்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
இயந்திர அறிவியல் ஆற்றலை கற்றுக்கொடுக்க கைகோர்க்கும் மைக்ரோசாப்ட் - நெட்ஃபிளிக்ஸ்! - டெக் தமிழ்
'ஓவர் தி மூன்' என்ற புதிய நெட்ஃபிக்ஸ் இணைய தொடர் மூலம் ஈர்க்கப்பட்ட மைக்ரோசாப்ட், மூன்று புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தரவு அறிவியல், இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை கற்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் குறிப்பிட்டுள்ளது.
![இயந்திர அறிவியல் ஆற்றலை கற்றுக்கொடுக்க கைகோர்க்கும் மைக்ரோசாப்ட் - நெட்ஃபிளிக்ஸ்! Microsoft partners Netflix](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9339774-thumbnail-3x2-microsoft-netflix.jpg)
"ஓவர் தி மூன்" என்பது ஃபீ ஃபீ என்ற பெண்ணை குறித்த ஒரு படம். அவர் தனது சொந்த விண்வெளி ஏவூர்தியை உருவாக்கி, நிலவை அடைய தனது படைப்பாற்றல், வளம், கற்பனையை வெளிக்கொணர்கிறார். இதன்மூலம் ஈர்க்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய தொகுப்புகளை வெளியிட நெட்ஃபிளிக்ஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது.
புதிய மைக்ரோசாப்ட் கற்றல் திட்டத்தின் மூலம், தரவு அறிவியல், இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை தொடக்க நிலையிலுள்ள ஆர்வமிக்கவர்கள் கற்றுத் தேறலாம். இதன் மூலம் செழுமையான நுண்ணறிவு ஆற்றலை மாணவர்களிடத்தில் செலுத்த முடியும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.