தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

டிக்டாக் செயலியை கையகப்படுத்தும் மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் சேவையை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் ஆகிய நாடுகளில் தங்கள் நிறுவனத்தின் கீழ் இயக்குவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

microsoft tiktok
microsoft tiktok

By

Published : Aug 3, 2020, 5:40 PM IST

நியூயார்க்: சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பைட் டான்ஸ் நிறுவனத்தின் பிரபலமான சிறு காணொலி பகிரும் செயலியான டிக்டாக் நிறுவனத்தை, அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

உலக அளவில் மிகவும் பிரபலமான சிறு காணொலி பகிரும் செயலியான டிக்டாக், ஏற்கெனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது. இச்சூழலில், அமெரிக்காவும் டிக்டாக்கை தடை விதிக்க முனைந்ததை அடுத்து, மாற்று வழிகளை டிக்டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட்-டான்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது.

'டிக்டாக் அமெரிக்க நிறுவனமாகச் செயல்பட்டால் தடை இல்லை'

அதன்படி, டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் தொழில்நுட்ப ஜாம்பவான் ஆன மைக்ராசாஃப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக, சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.

எனினும், டிக்டாக் செயலிக்குத் தடை விதிப்பதில் ட்ரம்ப் உறுதியாக இருந்ததால், பைட்-டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அலுவலர் சத்ய நாதெல்லா சந்தித்துப் பேசினார்.

டிக்டாக் தடை: இந்தியாவைப் போன்றே அமெரிக்காவிலும் வலுக்கும் குரல்!

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'டிக்டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும்; இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருகிறது' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details