டெல்லி: ஃபேஸ்புக் தனது மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் தளங்களில் 'அழிந்துபோகும்' (Vanish) பயன்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் செயலிகளின் தரவுகளை அழிக்கும் அம்சம்! - இன்ஸ்டாகிராம்
ஃபேஸ்புக் தனது மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் தளங்களில் 'அழிந்துபோகும்' (Vanish) பயன்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்களின் உரையாடல்கள், புகைப்படங்கள், குரல் செய்திகள் ஆகியன மறைந்து போகும் அம்சத்தினைக் கொண்டுள்ளது. இது பயனர்களின் தேர்வுக்கு உட்பட்டது என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் இன்று முதல் இந்த பயன்முறையை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். சில பயனர்களுக்கு ஏற்கெனவே மேம்படுத்தப்பட்ட மெசேஞ்சரில் இந்தப் பயன்பாடு கிடைத்திருப்பதாக சமூக வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இந்த வேனிஷ் பயன்முறை, மெசேஞ்சரின் தற்போதைய ரகசிய உரையாடல் பயன்முறையை ஒத்திருக்கிறது. இது தனிநபர் சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படும் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் உரையாடல்களை அழிக்க அனுமதிக்கிறது. மேலும் இதன் மூலம் அனுப்பப்படும் உரையாடல்களை, பயனர்கள் இரு புறத்தில் அழிக்கும் வண்ணம் இந்த பயன்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.