கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பொதுமக்களும் தொலைக்காட்சி பார்ப்பது, ஸ்மார்ட்போன்களில் கேம்களை விளையாடுவது என்று தங்கள் நேரத்தைக் கழிக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் தளமான My Govtஇல் புதிதாக ”Khushiyan Phailaon, Virus Nahi” என்ற புதிய சேலன்ஞ் வெளியிடப்பட்டுள்ளது.