ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட இணைய உலாவியை அறிமுகப்படுத்து உள்ளதாக அறிவித்துள்ளது. பயனர்களுக்கு அவர்களின் தகவல்களின்மீது முழுக் கட்டுப்பாட்டையும் இது வழங்குகிறது. ஜியோ பேஜ் எனப் பெயரிடப்பட்ட இந்த உலாவி, கூகுளின் குரோமியம் பிளிங்க் எஞ்சினில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘ஜியோ-பேஜஸ்’ பிரவுசர் - ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு! - jio browser
இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு தொலைபேசி நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. தற்போது அதன் புதிய வெளியீடாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜியோ-பேஜஸ் உலாவி உள்ளது.
jio pages browser
தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளை இந்த உலாவி ஆதரிக்கிறது. தற்போது ஆண்ட்ராய்டு பயனர்கள் ப்ளே ஸ்டோர் மூலம் இந்த உலாவியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஜியோ பேஜஸ் சிறப்பமசங்கள்:
- டார்க் மோட்
- இருப்பிடம் தொடர்பான தகவல்கள், செய்திகள்
- பயனர்கள் இன்காக்னிடோ மோடில் குறியீடு அமைத்தோ, கைரேகை மூலமாகவோ பாதுகாக்க முடியும்
- தேவையற்ற விளம்பரங்களையும் பாப்அப்களையும் தடுக்கும்
- மிக விரைவான தேடுதல் அனுபவம்