தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

இன்ஸ்டாகிராமின் புதிய அம்சமான ‘வழிகாட்டி’

புதிய அம்சமான ‘வழிகாட்டி’ இன்ஸ்டாகிராமில் புகுத்தப்பட்டுள்ளது. பயனர்களின் மனதையும், செயல்பாடுகளையும் வல்லுநர்களைக் கொண்டு கணித்து அதற்கேற்றவாறு இந்த அம்சம் அமைக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Instagram new update
Instagram new update

By

Published : May 20, 2020, 6:51 PM IST

கலிஃபோர்னியா: பயனர்கள் தாங்கள் தொடர்பவர்களின் வழிகாட்டுதல்களைப் பெற இன்ஸ்டாகிராம் தனது தளத்தில் புதிய வசதியான வழிகாட்டி ‘Guides’ எனும் அம்சத்தை வழங்கியுள்ளது.

“பயனர்கள் தாங்கள் விரும்பும் செய்திகளையும், தகவல்களையும் எந்த விதமான இடையூறும் இல்லாமல் பெற இன்ஸ்டாகிராம் முயற்சித்து, புதுமையான பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.

விளம்பரதாரர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய அம்சம் யூ-டியூப் செலக்ட்

தற்போது அதன் ஒரு அங்கமாக கொண்டு வரப்பட்ட ’வழிகாட்டி’ எனும் அம்சமானது, பயனர்கள் தொடரும் பிரபலங்கள், நிறுவனங்கள், பிடித்த படைப்பாளிகள் என அனைவரிடமும் இருந்து வழிகாட்டுதல்களை இலகுவாக பெற முடியும்”

இவ்வாறு இன்ஸ்டாகிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details