சீன செயலியான டிக்டாக்கிற்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் செயலியில் களமிறக்கப்பட்ட ரீல்ஸ் அம்சத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், பயனாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ரிமிக்ஸ் அம்சம் ரீல்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அம்சம் ஏற்கனவே டிக்டாக்கில் டுயட் என்ற பெயரில் பிரபலமாக இருந்தது. ரீமிக்ஸ் வசதி மூலம், பயனாளர்கள் தங்களது சொந்த ரீலை ஏற்கனவே இருக்கும் ரீலில் அருகிலே உருவாக்கலாம்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ரிமிக்ஸ் வீடியோ ரெக்கார்ட் செய்த பிறகு, அதில் ஆடியோ அதிகரிப்பது, ஓரிஜினல் ரீல்ஸின் ஆடியோவை குறைப்பது, புதிதாக ஆடியோவை சேர்த்துக்கொள்வது போன்ற அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக அப்லோட் செய்யப்பட்ட ரீல்ஸ் வீடியோஸ் மட்டுமே, ரிமிக்ஸ் செய்யமுடியும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ரீல்ஸில் அறிமுகமான ரிமிக்ஸ் அம்சம் இதுமட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் அதிகளவிலான மக்களை இணைக்கும் விதத்தில், லைவ் ரூம், கேள்விகள், கருத்துக் கணிப்புகள், கதைகள் மற்றும் AR Effect ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:'12ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ்' தெறிக்கவிடும் சியோமி மி 11 சீரிஸ்