தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட குறுந்தகவல் சேவை! - இன்ஸ்டாகிராம் மெசஞ்சர்

இந்திய மெசஞ்சர் செயலியான ஹைக்கில் உள்ளது போல ஒன்றிணைந்து காணொலிகளை கண்டுகளிக்கும் வசதி, அரட்டை தீம்கள், அழிக்கும் பயன்முறை ஆகிய அம்சங்கள் மெசஞ்சர், இன்ஸ்டாகிராமில் விரைவில் நிறுவப்படவுள்ளது.

facebook messenger new features
facebook messenger new features

By

Published : Nov 20, 2020, 1:49 PM IST

ஹைதராபாத்: நீங்களும் உங்கள் நண்பர்களும் காணொலி அரட்டையில் ஈடுபடும் நேரத்தில் ஐஜிடிவி, ரீல்ஸ், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், பிரபலமான காணொலிகளை ஒன்றிணைந்து காணும் வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் நிறுவப்படவுள்ளது. முன்னதாக இந்த அம்சம், இந்திய மெசஞ்சரான ஹைக்கில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பயனர்கள் ஒன்றிணைந்து காணொலிகளைக் கண்டுகளிக்க முடியும்.

மெசஞர் புதிய பதிப்பு

அதுமட்டுமில்லாமல், காணொலி அழைப்பின்போது புதுமையான எமோஜிகளை பயன்படுத்திகொள்ள முடியும். மேலும், அரட்டை தீம்களை மாற்றியமைத்து, தங்களுக்கான விருப்பத் தேர்வினை எல்லாவிதத்திலும் பயனர்கள் மேற்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

ABOUT THE AUTHOR

...view details