டெல்லி: நாடு தழுவிய கரோனா ஊரடங்கு சமயத்தில் 5.5 லட்சம் பிரியாணிகளை பயனர்கள் பதிவுசெய்து பெற்றுள்ளதாக ஸ்விகி நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 32.3 கோடி கிலோ அளவுள்ள வெங்காயத்தையும் 5.6 கோடி கிலோ அளவின் வாழைப்பழங்களையும் பயனர்கள் ஸ்விகி செயலி மூலமாக பதிவுசெய்து பெற்றுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் தினசரி குறைந்தது 65 ஆயிரம் இரவு உணவுக்கான பதிவுகள் சரியாக இரவு 8 மணிக்கு செய்யப்பட்டது என்றும் தனது அறிக்கையில் ஸ்விகி சுட்டிக்காட்டியுள்ளது.