தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கிட்டத்தட்ட 5 கோடி இந்திய பயனர்களின் தகவல்கள்... சொச்ச ரூபாய்க்கு விற்றுத்தள்ளிய ட்ரூகாலர்! - Does Truecaller steal data

4.75 கோடி இந்திய பயனர்களின் விவரங்கள் அனைத்தும் ட்ரூ காலர் தரவு தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ட்ரூ காலர் நிறுவனம் மறுத்துள்ளது.

Indian Truecaller users data on sale
Indian Truecaller users data on sale

By

Published : May 29, 2020, 8:33 PM IST

இணைய உளவு நிறுவனமான சைபில் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 4.75 கோடி இந்தியர்களின் தனிநபர் விவரங்களை இந்திய மதிப்பின்படி 75,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ட்ரூ காலரில் உள்ள அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும். அதனை யாரும் தவறாக பயன்படுத்தவில்லை எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. “பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் எங்கள் சேவையின் நேர்மைக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கி வருகிறோம். மேலும் தவறான செயல்கள் நடக்கின்றனவா என்பதை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறது ட்ரூகாலர்.

“ஒரு பிரபலமான விற்பனையாளரை எங்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர் ட்ரூ காலரில் இருக்கும் 4.75 கோடி இந்தியர்களின் தகவல்களை இந்திய மதிப்பில் 75,000 ரூபாய்க்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது 2019ஆம் ஆண்டிற்கான தகவல்கள். இத்தனை குறைந்த விலைக்கு அந்த தகவல்கள் விற்கப்பட்டது தான் ஆச்சரியமே.

சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போனின் வேரியண்ட் அறிமுகம்!

அந்த தகவல்கள் அனைத்தும் மாநிலம், நகரங்கள் வாரியாக சரியாக பிரிக்கப்பட்டு இருந்தன. இந்த தகவல்களை எடுத்தவர் இதனை இப்படி பிரிப்பதற்கே ஒரு குறிப்பிட்ட நேரத்தை செலவழித்து இருந்திருப்பார். விற்கப்பட்ட அந்த தகவல்களில் பயனாளர்களின் கைப்பேசி எண்கள், பாலினம், நகரம், அவர் பயன்படுத்தும் கைப்பேசி நெட்வொர்க், ஃபேஸ்புக் கணக்கு என பல முக்கியமான தகவல்கள் இருந்தன.

இது குறித்த ஆய்வுகளை இன்னும் சைபில் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்தி கொண்டு வருகின்றனர். இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது அதனை எங்கள் பதிவில் வெளியிடுவோம் என சைபில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனர்களின் திருடப்பட்ட தகவல்கள்

“இப்போது கூறப்பட்டுள்ள தகவல் திருட்டு இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு கூறப்பட்ட அதே தகவல்கள் தான். பல தொடர்பு எண்களின் தரவுகளை எடுத்து, அதில் ட்ரூ காலர் முத்திரையை பொருத்துவது சுலபமான காரியம். இதனை செய்வதன் மூலமாக தகவல்களின் தரம் மேம்படுத்தப்பட்டு அதனை விற்பனை செய்வது சுலபமாகி விடுகிறது” என்று ட்ரூ காலர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details