டெல்லி: நாட்டிற்கு எதிரான பரப்புரை, போலி செய்திகளைப் பரப்பும் 35 யூ-ட்யூப் சேனல்கள், இரண்டு இணையதளங்களை முடக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா கூறுகையில், 'இந்த இணையதளங்கள் மற்றும் யூ-ட்யூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்திய புலனாய்வு அமைப்புகள் இந்த சமூக ஊடக கணக்குகள், இணையதளங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, உடனடி நடவடிக்கைக்காக அமைச்சகத்திடம் தெரிவித்தது. அதன்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.