டெல்லி: வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் வசதிக்காக ஐஓஎஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தும் செயலிகளை இந்தியர்கள் வடிவமைத்துள்ளனர்.
தொலைதூர பணிகளுக்கு ஏதுவாக அடுத்த தலைமுறை ஐஓஎஸ் செயலிகளை வடிவமைத்த இந்தியர்கள்! - indian ios apps
இந்திய செயலி உருவாக்கிகள் சிலர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்துக்கு ஏதுவாக வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமையைக் குறைக்கும் வண்ணத்தில் சில செயலிகளை உருவாக்கியுள்ளனர்.
indian ios apps
இந்தியர்கள் வடிவமைத்துள்ள செயலிகளும், அதன் பயன்பாடுகளை குறித்தும் அறிந்து கொள்வோம்.
- அதில், என்பாஸ் பாஸ்வேர்ட் மேனேஜர் (Enpass Password Manager), பயனர்களை இணையவசதி இல்லாமல் தங்களின் கடவுச்சொல்லை சேமிக்க உதவுகிறது. இதனை உருவாக்கியவர்கள் வினோத் குமார், ஹேமந்த் குமார் எனும் செயலி உருவாக்கிகள். இச்செயலியை ஐபோன், ஐவாட்ச் என ஆப்பிளின் அனைத்து தகவல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம்.
- அதேபோல, சென்னையைச் சேர்ந்த ராஜா விஜயராமன் உருவாக்கிய கால்சி (Calzy), பயனர்களுக்கு புதுவித கணக்கியல் அனுபவத்தை வழங்குகிறது.
- லுக்அப் "LookUp" செயலியானது ஆங்கில அகராதியை எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை உருவாக்கியவர் விதித் பார்கவா.
- ஹைதரபாத்தைச் சேர்ந்த நிறுவனமான ஃப்ளூயிட் டெக், நோட்ஷெல்ஃப் 'Noteshelf' எனும் குறிப்புகளை சேமிக்கும் செயலியை வடிவமைத்துள்ளது. இதில் குறிப்புகள் எடுப்பது மட்டுமின்றி, வேலைகளுக்கு பயன்படும் பல அம்சங்கள் இருப்பதாக அதன் நிர்வாக தலைவர் ராம கிருஷ்ணா கூறுகிறார்.
- பயனர்கள் தாங்கள் எடுத்த புகைப்படத்தை மெருகேற்ற உருவாக்கப்பட்டது தான் சூப்பர் இம்போஸ் எக்ஸ் ‘Superimpose X' செயலி. இதனை பங்கஜ் கோஸ்வாமி உருவாக்கியுள்ளார்.