மும்பை : ஐமொபைல் பே அப்ளிகேஷன் வாயிலாக வங்கிகளின் சேவையை எளிதில் பெறலாம்.
பணப் பரிவர்த்தனை செயலியான, 'ஐமொபைல் பே' பல்வேறு வசதிகளை ஒருங்கே நமக்கு வழங்குகிறது. முதலாவதாக வாடிக்கையாளர்கள் அல்லது வியாபாரிகளுக்கு யூபிஐ (Unified Payments Interface) எண் வழங்கப்படும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அல்லது வியாபாரிகள் பணப் பரிவர்த்தனை, பல்வேறு கட்டணங்கள் (பில்) செலுத்துதல், ரீசார்ஜ் மட்டுமின்றி சேமிப்பு கணக்கு போன்ற உடனடி சேவைகளையும் பெறலாம். மேலும், முதலீடுகள், கடன்கள் (லோன்), கடன் அட்டை (கிரெடிட் அட்டை), கிப்ட் கார்டுகள், டிராவல் கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன.