தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

'தடுப்பூசி போடுங்கள்' - கூகுளின் டூடுல் அட்வைஸ் - google doodle advice

மக்களிடம் கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் பக்கத்தை வடிவமைத்துள்ளது.

Google
கரோனா தடுப்பூசி

By

Published : Jun 22, 2021, 10:43 AM IST

மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்பதைக் கூகுள் நிறுவனம் தனது ஹோம் பேஜ்-ஜில் டூடுல் வழியாக வலியுறுத்தியுள்ளது.

கூகுள் டுடூலில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாஸ்க் அணிந்துள்ளது. அதில் E எழுத்து மட்டும் சுகாதாரத் துறையினரை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுளின் டூடுல் அட்வைஸ்

முதல் நான்கு எழுத்துகள் தடுப்பூசி போட்டு கொள்வது மாதிரியும், அடுத்த எழுத்தில் தடுப்பூசி போட்டு முடித்ததுபோல், மகிழ்ச்சியில் கைகளை உயர்த்திக் கொண்டாடும் வகையிலும் எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

"தடுப்பூசி போடுங்கள். மாஸ்க் அணியுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்" என்பதை டூடுல் கூறுகிறது.

உலகெங்கும் கரோனா தொற்றுநோய் பரவத் தொடங்கிய நாள் முதலே, கூகுள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், நேற்று(ஜூன்.21) ஒரே நாளில் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தி இந்தியா உலக சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரிமோட் காருக்குப் பதிலாக பார்லே-ஜி அனுப்பிய அமேசான்!

ABOUT THE AUTHOR

...view details