தனது பயனர்களுக்கு, தரமான வலை தேடுதல் அனுபவத்தை அளிக்க கூகுள் நிறுவனம் பல மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக மிகவும் பயனுள்ள தகவலுடன் புதுப்பிக்கப்பட்ட முடிவுகளைக் காண்பிக்க கூகுள் தனது தேடுபொறியின் தேடல் பக்கங்களின் வடிவமைப்பை மேம்படுத்தி வெளியிடவுள்ளது.
புதுமையுடன் வெளிவரும் கூகுள் தேடுபொறி - Google Search
எளிதாகவும், விரைவாகவும் தேடுபொறியின் பயனை அனுபவிக்க, பல பயனுள்ள தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்ட தேடுபொறி முகப்பை வெளியிட இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
![புதுமையுடன் வெளிவரும் கூகுள் தேடுபொறி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3372956-thumbnail-3x2-google.jpg)
google
புதிய கூகுள் பதிப்பானது, பலதரப்பட்ட சேவைகளை முன்னிறுத்தி, செயற்கை நுண்ணறிவு கொண்டு பயனர்களுக்கு ஏற்ற தகவல்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் தேடுபொறியில் விவரங்கள் தேடும்போது, குறிப்பிட்ட சில விளம்பரங்கள் தடித்த எழுத்துடன் முதலில் காட்சியளிக்கும். புதிய பதிப்பில் இவை மாற்றியமைக்கப்பட்டு, பயனர்களின் தேடல் விபரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.