தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

'கூகுள் பே பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும்' - பயனர்கள் அதிர்ச்சி!

கூகுள் பே செயலி மூலமாக உடனடியாக பணம் அனுப்பும் வசதிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

'கூகுள் பே
'கூகுள் பே

By

Published : Nov 24, 2020, 1:03 PM IST

தற்போது ஏராளமானோர் தங்கள் மொபைல் சாதனத்தில் கூகுள் பே பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துகின்றனர். நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பணம் அனுப்பவும் இந்த செயலிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் டெஸ்க்டாப் மூலமாக பணம் அனுப்பும் வசதியை ஜனவரி மாதம் முதல் நிறுத்திட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021ஆம் ஆண்டு தொடக்கம் முதல் pay.google.com என்ற இணையதளம் மூலம் பணம் பெறவும் அனுப்பவும் முடியாது. பணப்பரிமாற்றத்திற்கு கூகுள் பே செயலி அவசியம் வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, கூகுள் பே உடனடி பணப் பரிமாற்றத்திற்கும் இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரணமாக வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றும்போது 1 முதல் 3 நாள்கள்வரை ஆகக்கூடும். ஆனால், கூகுள் பே செயலியில் நொடியில் அனுப்பி வந்தனர்.

இதைக் கருத்தில் கொண்டு, கூகுள் பே செயலியில் பணத்தை உடனடியாக அனுப்ப வேண்டும் என்றால், 1.5 விழுக்காடு கட்டண சேவையாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை கடைகளுக்கு பணத்தை ஸ்கேன் செய்து அனுப்புவதில் சேராது. முன்னதாக, கடந்த வாரம் பல புதிய வசதிகளை கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details