தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கூகுள் மேப்ஸில் புது அப்டேட்... ஐபோன் பயனாளர்கள் குஷி - டார்க் மோட் வசதி

ஐபோன் பயனாளர்களுக்கு, கூகுள் மேப்ஸ் செயலியில் டார்க் மோட் உள்பட புதிய வசதிகளை கூகுள் நிறுவனம் வழங்கவுள்ளது.

google
கூகுள் மேப்ஸ்

By

Published : Aug 5, 2021, 4:53 PM IST

இன்றைய காலகட்டத்தில், யாரோ ஒருவரிடம் வழி கேட்பதைவிட, கூகுள் மேப் உதவி மூலம் எளிதாக இலக்கை அடையமுடிகிறது. பயனாளர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவருகிறது.

இந்நிலையில், கூகுள் மேப் செயலியின் அடுத்த வெர்ஷனில் ஐபோன் பயனாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான டார்க் மோட் வசதியை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் செயலியில் டார்க் மோட்

ஓரிரு வாரங்களில் ஐபோனில் டார்க் மோட் கொண்டு வரப்படும். அதனை செட்டிங்கிற்கு சென்று பயனாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். டார்க் மோட் வசதி பேட்டரி ஆயுளை அதிகரிப்பது மட்டுமின்றி கண்களுக்கு சிறிய பிரேக்கை அளிக்கிறது.

ஆப்பிள் முதலில் iOS 13இல் டார்க் மோட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, ஆனால் கூகுள் தனது செயலிகளுக்கு இந்த வசதியைக் கொண்டுவரச் சிறிது காலம் தேவைப்பட்டது. இந்தாண்டின் தொடக்கத்தில், கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு டார்க் மோட் அம்சத்தை வழங்கியது.

டார்க் மோடுடன் சேர்ந்து, மெசேஜிங்கிலும் புதிய அப்டேட்டை கூகுள் நிறுவனம் வழங்கவுள்ளது. அந்த வசதியானது, iMessage செயலியில் உள்ள கூகுள் மேப்ஸ் பட்டன் மூலம் நண்பர்களுக்கு தங்களின் நிகழ் நேர இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

சாதாரணாக ஒரு மணி நேரம் இருப்பிட தகவல் பகிர முடியும். தேவைப்பட்டால் மூன்று நாள்களுக்கு இருப்பிட தகவலை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போல, விட்ஜெட் அம்சத்தையும் ஐபோன் பயனாளர்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த அம்சமானது, திரையில் தேவைப்பட்டால் கூகுள் மேப்ஸ் விட்ஜெட்டை வைத்து கொள்ளலாம். அதன் மூலம், அருகிலிருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:ட்விட்டர் ஸ்பேஸ் அப்டேட் - இனி எளிதாக ஷேர் செய்யலாம்

ABOUT THE AUTHOR

...view details