தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கையெழுத்தைக் கணினியில் பேஸ்ட் செய்ய உதவும் கூகுள் - டெக் செய்திகள் தமிழ்

காகிதத்தில் எழுதிய தகவல்களைக் கணினியில் எளிதில் பேஸ்ட் செய்யும் புதிய வசதியைக் கூகுள் லென்ஸ் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Lens
Google Lens

By

Published : May 8, 2020, 2:16 PM IST

வகுப்பறையிலோ ஆப்பீஸ் மீட்டிங்கிலோ பக்கம் பக்கமாக கை வலிக்க எழுதும் குறிப்புகளையும் தகவல்களைக் கணினிக்கு மாற்றுவது என்பது பெரும் தலைவலியான வேலை. இந்த கடினமான வேலையை மற்றவர்களுக்குத் தள்ளிவிடுவதே பலரின் 'வேலையாக' இருக்கும்.

இந்நிலையில் காகிதத்தில் கையால் எழுதப்பட்ட தகவல்களையும் தரவுகளையும் கணினிக்கு மாற்ற உதவும் அப்டேட்டை தனது லென்ஸ் செயலிக்குக் கூகுள் வழங்கியுள்ளது.

எவ்வாறு இந்த வசதியைப் பயன்படுத்தலாம்?

  • இந்த வசதியைப் பெற ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் கூகுள் லென்ஸ், கூகுள் குரோம் என இரண்டு செயலிகளையும் வைத்திருக்க வேண்டும்.
  • அந்த இரு செயலிகளிலிருந்தும் ஒரே கூகுள் கணக்கை log in செய்யதிருக்க வேண்டும்.
  • நாம் எழுதியுள்ள தகவல்களைக் கூகுள் லென்ஸில் காட்டி, எதைக் காபி பேஸ்ட் செய்ய வேண்டுமோ அதை ஹைலைட் செய்ய வேண்டும்.
  • அதைத்தொடர்ந்து அந்த தகவல்களை Google Docsஇல் பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

இந்த அப்டேட்டை கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:ரியல்மி Narzo சீரிஸ் அறிமுகம் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details