கூகுள் இந்தியா தனது யுடியூப் தளத்தின் மூலம் அமைத்துள்ள, யூடியூப் லேர்னிங் டெஸ்டினேஷன் (YouTube Learning Destination) என்ற பக்கத்தை தற்போது ஆங்கிலம், ஹிந்தியில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் விரைவில் இதனை செயல்படுத்துவதாக அந்நிறுவன வலைப்பதிவுப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூகுள் இந்தியா அமைத்திருக்கும் தளம் YouTube Learning Destination! - tech related news
கூகுள் இந்தியா ‘யூடியூப் லேர்னிங் டெஸ்டினேஷன்’ என்ற தளத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் தேவையான கல்வி வழிகாட்டுதல் முறைகளைக் கொண்டு உருவாக்கியுள்ளது.
YouTube Learning Destination
மேலும், வீட்டிலிருந்தே பாடம் நடத்தும் தொழிற்நுட்பத்தையும் தற்போது ஹிந்தி மொழியில் அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல், ஊரடங்கின் போது குழந்தைகளுக்குத் தேவையான ‘சோடா பீம்’ போன்ற புத்தகங்களையும் தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.