தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கூகுளுக்கு வயது 22! - how old is google

கணிதத்தில் 1க்கு பிறகு 100 பூஜ்ஜியங்கள் வருவதைக் குறிக்கும் சொல்லான கூகோல் என்பதன் அடிப்படையில் ’கூகுள்’ என்ற பெயர் வந்தது. இன்று கூகுள் தனது 22ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. லாரி பேஜ், செர்ஜி பிரின் ஆகிய இருவரால் செப்டம்பர் 27, 1998ஆம் ஆண்டில் தொடங்கபட்ட நிறுவனம் தான் கூகுள்.

happy birthday google
happy birthday google

By

Published : Sep 27, 2020, 11:26 PM IST

Updated : Sep 28, 2020, 12:20 AM IST

மென்லோ பார்க் (கலிஃபோர்னியா) : அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர்களாக இருந்த லாரி பேஜ், செர்ஜி பிரின் ஆகிய இருவரும் தான் கூகுளின் பெற்றோர். தொடக்கத்தில் அது செர்ஜியின் ஆய்வுத் திட்டமாகதான் உருவானது.

அந்தக் காலக்கட்டத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்த வலைதள வளர்ச்சியை பேஜ் ஆர்வத்தோடு கவனித்தார். குறிப்பாக அவருக்கு இணைய தேடலில் அதிக ஆர்வமிருந்தது. அந்தக் காலத்து தேடுதல் இயந்திரங்களான அல்டாவிஸ்டா, எக்ஸைட், லைகோஸ் போன்ற எல்லாமே அடிப்படையில் ஒரே உத்தியைதான் கடைப்பிடித்தன.

பொதுவாக இணையதளங்கள் அனைத்தும் ’ஸ்பைடர்ஸ்’ எனப்படும் மென்பொருள் சிலந்திகளை உலாவவிட்டு, அவற்றின் மூலம் கிடைக்கும் இணையப் பக்கங்களை எல்லாம் தொகுத்து அட்டவணையாக்கி, இணையவாசிகளின் தேடல் பதத்திற்கு ஏற்ப பொருத்தமான முடிவுகளைப் பட்டியலிட்டன.

லாரி பேஜ், இந்த அடிப்படை உத்தியை தன்னால் மேம்படுத்த முடியும் என நம்பினார். இணையத்தில் மென்பொருள் சிலந்திகள் உலாவும்போது, குறிப்பிட்ட இணையப் பக்கம் வேறு எந்த பக்கங்களுக்கு எல்லாம் இணைப்புகளைக் கொண்டிருக்கிறது என்பதை அறிவதன் மூலம் அந்தத் தளத்தின் தரத்தை அளவிட முடியும் என்றும், அதனடிப்படையில் தேடல் முடிவுகளை வரிசைப்படுத்தி பட்டியலிட்டால் இன்னும் துல்லியமாக இருக்கும் என்பதும் தான் பேஜின் ஐடியா. அதாவது இணையப் பக்கங்களின் பின் இணைப்புகளை (பேக் லிங்க்ஸ்) கவனித்தால் தேடல் முடிவுகளை செழுமைப்படுத்தலாம் என நம்பினார்.

பேஜின் நண்பரான செர்ஜி பிரின் கணிதப்புலியாக இருந்தவர். இதற்கான சமன்பாடுகள் போன்றவற்றை கவனித்துக்கொள்ளவே இருவரும் சேர்ந்து நல்லதொரு தேடுதல் இயந்திரத்திற்கான ’பேஜ் ரேங்க்’ எனப்படும் அல்காரிதத்தை உருவாக்கினர். இதுதான் கூகுளின் தேடல் சூத்திரமாக அமைந்தது. 1996ஆம் ஆண்டு, இந்த தேடல் சேவையை ஸ்டாட்ன்போர்ட் பல்கலைக்கழக வட்டத்தில் ‘பேக்ரப்’ எனும் பெயரில் அறிமுகம் செய்தனர்.

அந்தத் தேடல் சேவை மிகப்பெரிய தேடுதல் இயந்திரமாக உருவாகும் என்ற எண்ணம்கூட அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் அப்போதுதான் வலைதளம் பன்மடங்கு வளர்ச்சி பெறத் தொடங்கியிருந்தது. வலைதளங்கள் வளரும்போது, இணையதளங்களின் பின்னிணைப்புகளும் அதிகரித்து அதற்கேற்ப தங்கள் தேடல் சேவையின் துல்லியமும் அதிகரிக்கும் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்பட்டது. அந்த நம்பிக்கையில் தங்கள் தேடல் சேவையில் கூடுதல் கவனம் செலுத்த தீர்மானித்தனர். முதல் வேலையாக தேடுதல் இயந்திரத்தின் பெயரை மாற்றினர்.

கணிதத்தில் 1க்குப் பிறகு 100 பூஜ்ஜியங்கள் வருவதைக் குறிக்கும் சொல்லான ’கூகோல்’ என்பதன் அடிப்படையில் ’கூகுள்’ எனப் பெயர் வைத்தனர். இந்தப் புதிய நிறுவனத்தின் தலைமையகம் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து சூசன் வோஜ்சிகி என்பவரது கேரேஜுக்கு மாறியது. ஆரம்பக்கட்ட நிதியாக ஒரு லட்சம் டாலர் கிடைக்க கூகுள் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.

கூகுள் குறித்து சில தகவல்கள்

அப்போது லைகோஸ், அல்டாவிஸ்டா, எக்ஸைட் போன்ற தேடுதல் இயந்திரங்களோடு முன்னணி தளமான ’யாஹூ’வும் தேடுதல் இயந்திரமாக அறியப்பட்டது. பெரும்பாலானோர் யாஹூவையே பயன்படுத்தினர். பலரும் சிறந்த தேடல் முடிவுகளைப்பெற ஒன்றுக்கு மேற்பட்ட தேடுதல் இயந்திரங்களை பயன்படுத்திப் பார்த்தனர். இதனிடையே அதிக ஆரவாரம் இல்லாமல் அறிமுகமான கூகுள், ஆச்சரியப்படும் வகையில் மேம்பட்ட தேடல் முடிவுகளை அளித்து அனைவரையும் ஈர்க்கத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக, கூகுளின் முகப்பு பக்கம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிக எளிமையாக இருந்த நிலையில் அதன் தேடல் முடிவுகள் நச்சென அமைந்து அசத்தின.

கூகுளின் சில முக்கிய மைல்கற்கள்:

ஜூலை 2000 : கூகுள் உலகின் மிகப்பெரிய தேடுபொறியாக மாறியது.

ஜூலை 2001 : படங்கள் தேடுதல் தொடங்கப்பட்டது.

பிப்ரவரி 2003 : கூகுள் பிளாக்கிங் தளமான பிளாகரை வாங்குகிறது.

மார்ச் 2004 : ஜிமெயில் தொடங்கப்பட்டது.

அக்டோபர் 2004 : கூகுள், டெஸ்க்டாப் தேடலைத் தொடங்கி ஆண்டு இறுதிக்குள் எட்டு பில்லியன் குறியீடுகளை எட்டியது.

ஜூன் 2005 : கூகுளின் ஒரு முக்கிய ஆண்டு. நிறுவனம் கூகுள் வரைபடங்களை அறிமுகப்படுத்தியது. இது கூகுள் எர்த், பேச்சு, காணொலியில் வந்தது.

ஜூலை 2005 : ஆண்ட்ராய்டை கூகுள் வாங்கியது.

அக்டோபர் 2006 : கூகுளின் புகழ்பெற்ற காணொலித் தளமான யூடியூப்பை இந்திய மதிப்பில் சுமார் 7000 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

செப்டம்பர் 2008 : தேடல் குறியீடு ஒரு டிரில்லியனை எட்டியது. கூகுள் குரோம் உலாவி (பிரவுசர்) வெளியிடப்பட்டது.

ஜூலை 2009 : கூகுள் தனது குரோம் இயங்குதளத்தை நெட் புக்குகளுக்காக அறிமுகப்படுத்தியது.

ஜூலை 2010 : முதல் நெக்ஸஸ் ஸ்மார்ட் கைபேசி - நெக்ஸஸ் ஒன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 2011 : மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தை வாங்குவதாக கூகுள் அறிவித்தது.

மார்ச் 2012 : தொலைக்காட்சி, திரைப்படங்கள் வாடகை போன்ற பயன்பாடுகளுடன் கூகுள் ப்ளே ஸ்டோரை அறிமுகப்படுத்தியது.

ஜூன் 2012 : கூகுள் கிளாஸ் வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 2013 : ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெற்றிகரமாக் 100 கோடி தகவல் சாதனங்களில் நிறுவப்பட்டது. இது முழு ஆண்ட்ராய்டு சுற்றுச்சூழல் அமைப்பின் பணியையும் பிரதிபலிக்கிறது.

ஜனவரி 26, 2014 : தனியாருக்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப் மைண்ட் டெக்னாலஜிஸை வாங்க ஒப்புக்கொண்டதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

ஜனவரி 2014 : கூகுள் தனது மோட்டோரோலா மொபிலிட்டி யூனிட்டை சீனாவை தளமாகக் கொண்ட லெனோவாவுக்கு இந்திய மதிப்பில் சுமார் 21,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்தது.

செப்டம்பர் 2014 : கூகுள் வரைபடம் இந்தி மொழியில் கிடைத்தது. இந்தியாவில் சிறிய ரக ஸ்மார்ட் கைப்பேசிகளின் இயங்குதளமான ஆண்ட்ராய்டு ஒன்-இல் இந்தி குரல் ஆதரவு சேர்க்கப்பட்டது.

ஆகஸ்ட் 2015 : ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அலுவலரான லாரி பேஜ், தான் வகித்த கூகுள் தலைமை நிர்வாக இயக்குநர் பதவியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்த சுந்தர் பிச்சை அதன் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 2016 : கூகுள், 2017ஆம் ஆண்டு தொடங்கி, அதன் தரவு மையங்கள், அலுவலகங்கள் ஆகியவை 100 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் செயல்படும் என்று அறிவித்தது.

செப்டம்பர் 2017 : எச்.டி.சி ஒரு ’ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை’ அறிவித்தது. அதில் சில அறிவுசார் சொத்துக்களுக்கும், ஸ்மார்ட்போன் திறமைக்கும் பிரத்தியேகமற்ற உரிமைகளை கூகுள் பல ஆயிரம் கோடிக்கு வாங்கியது.

டிசம்பர் 2017 : கூகுள், இந்தியாவில் தனது முதல் முதலீட்டை டன்சோ எனும் ஹைப்பர்-லோக்கல் தளத்தில் செய்து, இணைய வர்த்தகத்தில் நுழைந்தது.

மார்ச் 29, 2018 : பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட, இணையவழி துணிகள் விற்பனை செய்யும் ஃபைண்ட் (fynd) தளத்தில் தனது அடுத்த முதலீட்டை மேற்கொண்டது.

ஜூலை 15, 2020 : இந்தியாவில் மிகப்பெரும் முதலீடாக, ரிலையன்ஸ் ஜியோ தளத்தின் 7.7 விழுக்காடு பங்குகளை பெற்றுக்கொண்டு, 33 ஆயிரத்து 737 கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் முதலீடு செய்தது.

கூகுளின் சில முக்கிய பயன்பாடுகள்
Last Updated : Sep 28, 2020, 12:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details