சென்ற மார்ச் ஏப்ரல் மாதங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்படாமல் முடங்கியது. அதேபோல நேற்றிரவு இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இண்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்படாமல் முடங்கியது.
மீண்டெழுந்த ஃபேஸ்புக், வாட்ஸ்அப்! - facebook down
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல்படாமல் இருந்த ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இண்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் இன்று அதிகாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
மீண்டெழுந்த பேஸ்புக், வாட்ஸ்அப்!
இரவு முழுவதும் செயல்படாமல் முடங்கியிருந்த இந்தத் தளங்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் முழுவதுமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இதை ஃபேஸ்புக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இண்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் முடங்கினாலும், ட்விட்டர் மட்டும் தொடர்ந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.