ஊரடங்கு காலத்தின் போது மது, போதைக்கு அடிமையாக கிடக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்த சமூக வலைதள ஜாம்பவான்களான கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் சேஃப் இன்டர்நெட் ஃபார்மசீஸ் என்ற தன்னார்வ அமைப்புடன் ஒன்றிணைந்து ‘டெக் டுகெதர்’ என்ற இணைய முயற்சியை புதிதாக தொடங்கியுள்ளனர்.
- இணையம் என்பது அது மக்கள் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். அதுவே ஒரு அசாதாரண சூழலில் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
- சமூக விலகலை கடைபிடிக்கும் இத்தருணத்தில், போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு மக்களை திசை திருப்பும் முயற்சிகளை எடுக்க வேண்டும்
- ஜான் ஹாப்கின்ஸ், ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இதுவரை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 2.5 மில்லியன் மக்கள் இணையத்தால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளனர்.