உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
அதேபோல சமூக வலைதளங்கள் சார்பிலும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் இதயத்தைக் கட்டித்தழுவும் புதிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இந்த நெருக்கடியான சூழலில் மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ஃபேஸ்புக், மெசஞ்சரில் புதிய Care எமோஜி வெளியிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.