2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபேஸ்புக்கின் ஃஎப்8 (F8) டெவலப்பர் மாநாட்டில், பயனாளர்களின் மூளையையும் கணினியையும் இணைக்கும் வகையில் ஆகுமென்டெட் ரியாலிட்டி சாதனத்தை உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பமானது பயனாளர்கள் தங்கள் மூளையில் நினைப்பதைத் தட்டச்சு செய்ய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் ஃபேஸ்புக்! - augmented reality
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளர்கள் நினைப்பதை டைப் செய்யும் வகையில் புதிய முன்மாதிரியைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
எண்ண ஒட்டத்தை அறிந்துகொள்ளப் பயனாளர்களைப் பாதிக்காத வண்ணம் ஆகுமென்டெட் ரியாலிட்டி கண்ணாடி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது சிறு சொற்றொடர்களை மட்டும் அடையாளம் கண்டுகொண்டு தட்டச்சு செய்வதாகவும் விரைவிலேயே பெரிய சொற்றொடர்களைக் குறைந்தபட்ச பிழைகளுடன் தட்டச்சு செய்ய வைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின், தலைமை ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஆபிராஷ் கூறுகையில், "மனித குலத்தின் அடுத்த புரட்சியை ஏற்படுத்தக் கூடிய இடத்தின் விளிம்பில் நாங்கள் இருக்கிறோம். ஆகுமென்டெட் ரியாலிட்டி, மெய் நிகர் தொழில்நுட்பத்தை (Virtual reality) இணைப்பதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நாம் தொடர்பு கொள்ளவிருக்கும் முறையே மாறும்" என்றார்.