தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

15 லட்சம் நியூசிலாந்து தாக்குதல் வீடியோக்களை நீக்கிய ஃபேஸ்புக் - நியூஸிலாந்து தாக்குதல்

கலிஃபோர்னியா: நியூசிலாந்து தாக்குதல் வீடியோக்கள் உலகெங்கிலும் பரவுவதை தடுக்க 15 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்

By

Published : Mar 18, 2019, 11:03 AM IST

நியூசிலாந்தில் மசூதி தாக்கப்பட்ட சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி தாக்குதலின்போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோக் காட்சிகளை தடைசெய்ய வேண்டும் என பல சமூக வலைதள பயனர்களும் ஃபேஸ்புக்கிடம்கேட்டுகொண்டதற்கு இணங்க, அந்நிறுவனம் 15 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும்போதே தடைசெய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details