சான் பிரான்சிஸ்கோ: சில நாடுகளில், ஜூலை 24ஆம் தேதி முதல் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் குழுவாக மேற்கொள்ளும் காணொலி அழைப்புகளை, ஃபேஸ்புக் செயலியில் நேரலை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தை கைபேசி / கணினி ஆகியவற்றின் மூலம் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் தனிநபர் பக்கம், குழுக்கள், பொது பக்கம் ஆக்கியவற்றில் நாம் இதன்மூலம் நேரலை ஏற்படுத்தமுடியும். ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப், மெசஞ்சர் சமூக வலைதள செயலிகளின் மூலம் 700 மில்லியல் அழைப்புகள் ஒரு நாளில் மேற்கொள்ளப்படுகிறது.