டெல்லி: தொற்றுநோய் காலத்தில் மக்களின் மனநலப் பிரச்னைகளைச் சமாளிக்கவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் “எமோஷனல் ஹெல்த்” என்ற மையப்படுத்தப்பட்ட வள மையம் பேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மனநலத்திற்கான பரப்புரை மேற்கொள்ளும் 'ஓகே டு டாக்', ஐகால் சைக்கோசோஷியல் ஹெல்ப்லைன் (டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ்), பயனர்களின் உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் லிவ் லவ் லாஃப் அமைப்பு ஆகியவை இந்த தளத்தில் பேஸ்புக் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றவுள்ளது.
"பேஸ்புக் பயன்பாட்டில் உலக மனநல தினத்திற்கு முன்னதாக தொடங்கப்பட்ட எங்கள் கோவிட் -19 தகவல் மையம், மனநல ஆரோக்கியம் குறித்து முன்னணி நிபுணர்களிடமிருந்து உதவிக் குறிப்புகள் பெற்று, அந்த தகவல்களை பயனர்களுக்கு வழங்குகிறது" என்று பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், துணைத் தலைவருமான அஜித் மோகன் தெரிவித்தார்.
"இந்தியாவில் பங்களிப்பாளர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமிலும் எட்டு புதிய நல்வாழ்வு வழிகாட்டி முறைகளையும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்" என்றும் அவர் ஒரு தெரிவித்துள்ளார்.