தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

டெலிகிராமை தாக்கிய சீனா... ட்விட்டரில் அதிர்ச்சி தகவல்! - china

டெலிகிராம் தளமானது சீனாவிலிருந்து சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

டெலிகிராம் தளம்

By

Published : Jun 14, 2019, 11:44 PM IST

டெலிகிராம் தளமானது உலக அளவில் முக்கிய சாட்டிங் தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கோடிக்கணக்கிலான பயனாளர்களைக் கொண்ட இந்த தளம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெலிகிராம் தள நிறுவனர் பாவெல் டூரோவ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “டெலிகிராம் தளத்தின் மீது தாக்குதல் நடத்திய பெரும்பாலான ஐபி முகவரிகள் சீனாவிலிருந்தே வந்திருக்கின்றன. சைபர் தாக்குதல் நடந்த நேரமும் ஹாங்காங்கில் போராட்டம் நடந்த நேரமும் ஒத்துபோயிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

டெலிகிராம் நிறுவனர் பாவெல் டூரோவ்வின் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details