உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் மக்கள் ஏற்கனவே அச்சத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ் குறித்த செய்திகளே வலம்வருகின்றன.
உலக சுகாதார நிறுவனம் கரோனா வைரஸ் குறித்து சரியான தகவல்களை மக்களுக்கு அளித்துவருகிறது. இருந்தாலும் மறுபக்கம் கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. குறிப்பாக, சில இணையதளங்களில் வெளியாகும் வதந்திகள் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன.
இந்நிலையில், பரப்பப்படும் செய்திகளின் நம்பகத்தன்மையைப் பயனாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில், கூகுள் செய்திகள் புதிய பிரிவு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.