கோவிட்-19 வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளிலும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, வைரஸ் மிகவும் வேகமாக பரவும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்காவும் இருக்கிறது.
இந்நிலையில் வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, இந்தாண்டு முட்டாள்கள் தினத்திற்கு திட்டமிட்டிருந்த பிராங்க்குகளை ரத்து செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் லோரெய்ன் டுவோஹில் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதில், "கூகுள் நிறுவனத்தின் சார்பில் இந்தாண்டு நாங்கள் வெளியிட இருந்த முக்கிய பிராங்க் விளம்பரங்களையும் செய்திகளையும் ஏற்கனவே ரத்து செய்துவிட்டோம். இருப்பினும் கூகுள் நிறுவனத்தின் மற்ற பிரிவுகளில் உள்ளவர்கள் ஏப்ரல் 1 பிராங்குகளைத் திட்டமிட்டிருக்கலாம். அவை ரத்து செய்யப்படுவதை அனைத்து துறை தலைவர்களும் உறுதி செய்ய வேண்டும்.