தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

39 நகரங்களில் தனது பைக் டாக்ஸி சேவையைத் தொடங்கிய ராபிடோ! - வணிக செய்திகள்

பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் தனது சேவையைத் தொடங்கவுள்ளதாக பிரபல பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோ தெரிவித்துள்ளது. எனினும் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில் சேவையை தொடங்கப்போவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

rapido
rapido

By

Published : May 20, 2020, 5:02 PM IST

டெல்லி: ஊரடங்கு 4.0 தளர்வுகளை கருத்திற்கொண்டு தனது சேவையை 11 மாநிலங்களில் உள்ள, 39 நகரங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோ தெரிவித்துள்ளது.

இன்று முதல் பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் தங்கள் சேவையை தொடங்கவுள்ளது ராபிடோ. மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தற்போதைக்கு சேவையை தொடங்கும் எண்ணம் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

DSLR தரத்தில் சாம்சங் சென்சார்!

வாகனம் ஓட்டுபவர். தலைக்கவசம், முகக் கவசம் அவசியம் அணிந்து செல்லவேண்டும். தன் இருச்சக்கர வாகனத்தில் கிருமி நாசினி எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதுமட்டுமில்லாமல், முதலில் அவர் பயணிகளை அழைத்து செல்லும் முன், முதல் தடவை ‘ஆரோக்ய சேது’ செயலியை தரவிறக்கம் செய்து, தங்களை பதிவு செய்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என நிறுவனம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details