அமேசான் நிறுவனத்தின் சேவைகளில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங், அமேசான் பிரைம் வீடியோ, அமேசான் மியூசிக் ஆகியவை குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால் இவை அனைத்தையும்விட அமேசான் நிறுவனத்திற்கு அள்ளித்தரும் சேவைப் பிரிவான Amazon Web Services (AWS) பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
க்ளவுட் ஸ்டோரேஜை பயன்படுத்தி நிறுவனங்கள் தங்கள் தரவுகளை சேமிக்கவும் பயனாளர்களுக்கு அதை எடுத்துச் செல்லவும் உதவுவதே AWS. இந்த AWS ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 10 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்தாண்டு இதே காலாண்டில் 7.7 பில்லியின் டாலர்களை AWS வருவாயாக ஈட்டியிருந்தது.
இது குறித்து AWS இணைய மாநாட்டில் பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆண்டி ஜாஸி கூறுகையில், "இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களும் AWS சேவையைப் பயன்படுத்தி இயங்குகின்றன.
அமேசான் பிரைம் வீடியோ மட்டுமின்றி; நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களும் AWS மூலம்தான் இயங்குகின்றன. இதுதவிர புகழ்பெற்ற இணைய வீடியோகேமான ஃபோர்ட்நைட்டும் AWS மூலமே இயங்குகின்றது.