தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஆப்பிள் ஐஓஎஸ் 14: சிறப்பம்சங்கள் என்னென்ன? - வைட்ஜெட்

ஆப்பிள் நிறுவனம் தனது கைப்பேசிகளுக்கு புதிய இயங்குதளப் பதிப்பான ஐஓஎஸ் 14ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பதிப்பை ஐபோன் 12 கைப்பேசி பயனர்கள் அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஓஎஸ் 14
ஐஓஎஸ் 14

By

Published : Jul 10, 2020, 11:48 PM IST

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் தனது கைப்பேசிகளுக்கு புதிய இயங்குதளப் பதிப்பான ஐஓஎஸ் 14ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்களை காணலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு முதல் முறையாக இணையம் மூலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டிம் குக், இணைய வழி நேரலை வாயிலாக உரையாடினார்.

ஆப்பிள் ஐஓஎஸ் 14

அப்போது, ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் மற்றும் ஒஎஸ் எக்ஸ் உள்ளிட்ட எதிர்கால வெர்ஷனை அறிமுகம் செய்தது. இந்தாண்டு ஐஒஎஸ் 14, மேக் ஒஎஸ் 10.16, வாட்ச்ஒஎஸ் 7 மற்றும் டிவிஒஎஸ் 14 உள்ளிட்ட அப்டேட்கள் வழங்கப்படுகிறது. அந்தவகையில், வெளியிடப்பட்ட மிகப்பெரிய அறிவிப்பு எதுவெனில், ஆப்பிள் நிறுவனம் தனது மேக்குகளில் (Macs) இண்டெலில் இருந்து ஏ.ஆர்.எம் பிராசசர்ஸுக்கு மாறுவதே ஆகும்.

கலக்கலான வசதிகளுடன் வெளியான சாம்சங் 2020 ஸ்மார்ட் டிவி சீரிஸ்!

  • ஐஓஎஸ் 14-இல் வெளியிடப்பட்ட முதல் அம்சம் என்னவெனில், ஆப் லைப்ரரி ஆகும். ஃபோல்டர் சிஸ்டம் முறையில் இயங்கும் இவற்றில், நீங்கள் செயலிகளை ஒழுங்குபடுத்த முடியும். இந்த ஃபோல்டர்களில் உள்ள செயலிகளை வலதுபக்கமாக ஸ்வைப் செய்வதன் மூலமாகவோ அல்லது லாஸ்ட் ஸ்கிரீன் மூலமாகவோ அணுகலாம்.
    ஆப்பிள் ஐஓஎஸ் 14
  • இரண்டாவதாக ஐஓஎஸ் 14- மாடலுக்கான வைட்ஜெட். இந்த விட்ஜெட்கள் முந்தைய மாடல்களை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. ஹோம் ஸ்க்ரீனில் கூட இந்த வைட்ஜெட்களை இணைக்கும் (ADD) வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    ஆப்பிள் ஐஓஎஸ் 14
  • அடுத்த மிக முக்கிய அம்சம் என்னவெனில், ஐபோன்களுக்கான பிட்சர் இன் பிட்சர் வசதி ஆகும். நீங்கள் ஒரு காணொலியை ஓட விட்டு விட்டு செயலியை மினிமைஸ் செய்யும் பட்சத்தில், காணொலி தொடர்ந்து சிறிய அளவிலான விண்டோவில் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த வசதி முன்னதாக ஐபேட்களில் மட்டும் எக்ஸ்ளுசிவ் ஆக இருந்தது.
    ஆப்பிள் ஐஓஎஸ் 14
  • சிரி மென்பொருளில் புதிய டிசைனையும் ஆப்பிள் அறிவித்துள்ளது. இதன் புதிய செயலி டிரான்ஸ்லேட் என்று அழைக்கப்படுகிறது. ஆப்லைனில் பல்வேறு மொழிகளை மொழிமாற்றம் செய்யும் வசதியை இது வழங்குகிறது.
    ஆப்பிள் ஐஓஎஸ் 14
  • அடுத்த பெரிய அம்சம் என்னவென்றால் மெசேஜ் அப்டேட் ஆகும் ஸ்டாக் மெசேஜிங் செயலியில் மேசேஜ்களை பின் (pin) செய்துகொள்ளும் அம்சம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், பல புதிய எமோஜிக்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவழியாக இன்லைனிலேயே மேசேஜ்களுக்கு ரிப்ளே செய்யும் வசதியை ஐ மேசேஜில் அறிமுமப்படுத்தப்பட்டுள்ளது.
    ஆப்பிள் ஐஓஎஸ் 14

மேற்கூறப்பட்ட மேம்பட்ட வசதிகளின் பீட்டா (Beta) வெர்சன் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details