ஆப்பிள் நிறுவனம் தனது ‘ஆப்பிள் ஆசிரியர்’ எனும் இலவச தொழில்முறை கற்றல் திட்டத்தில் இணைந்து, தங்கள் தயாரிப்புகளின் மூலம் கல்வி பயிற்றுவித்தலை ஊக்குவிக்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ள கல்வியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய கல்வியாளர்களை ஊக்குவிக்கும் ‘ஆப்பிள் டீச்சர்’ - ஆப்பிள் டீச்சர்
ஆப்பிள் நிறுவனம் தனது ‘ஆப்பிள் ஆசிரியர்’ தளத்தின் மூலம் ஆப்பிள் ஆசிரியர் சான்றிதழ் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த இலவச தொழில்முறை கற்றல் திட்டத்தில் இணைந்து, தங்கள் தயாரிப்புகளின் மூலம் கல்வி பயிற்றுவித்தலை ஊக்குவிக்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ள ஆப்பிள் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
APPLE Teacher
ஆப்பிள் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன், பயனாளர்களுக்கு டிஜிட்டல் பேட்ஜ், சான்றிதழ் ஆகியவை நிறுவனத்தால் வழங்கப்படும்.
கல்வியாளார்கள் தங்களை இத்திட்டத்தில் தங்களை பதிவுசெய்ய, கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
- இணைப்பைச் சொடுக்கவும்http://appleteacher.apple.com
- ‘ஆப்பிள் ஆசிரியர்’ தளத்தில் மின்னஞ்சல் மூலம் பதிவுசெய்ய வேண்டும்
- உள்நுழைந்தவுடன் ஐ-பேட் அல்லது ஐ-மேக் ஆகியவற்றின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 8 பாட்ஜ் பாடங்களை வெற்றிகரமாக கற்று பூர்த்திசெய்ய வேண்டும்
- இதனை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும், டிஜிட்டல் பேட்ஜும் வழங்கப்படும்