கரோனா நோய்த் கிருமித் தொற்று குறித்து 10ஆயிரத்துக்கும் அதிகமான கேள்விகளுக்கு அமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் செயலியான அலெக்ஸாவிடம் பதில் கேட்டுப் பெற முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
‘அலெக்ஸா பதில் வேண்டும்’ - கரோனா குறித்த கேள்விகளுக்கு பதில் தருகிறது அலெக்ஸா! - amazon working for covid-19 information
உலகளவில் உள்ள ‘அமேசான் அலெக்ஸா’ பயனாளிகள், ஊரடங்கின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கரோனா நோய்க் கிருமித் தொற்று குறித்தும் அலெக்ஸாவிடம் கேள்வி கேட்டு தெளிவான பதில்களை பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
alexa to answer covid-19 related queries
நோய்க் கிருமித் தொற்று குறித்து துல்லிய தகவல்களை அளிக்கும் திறன் அலெக்ஸாவிடம் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அலெக்ஸாவுடன் வினாடி வினா விளையாட்டு, எண் யூக விளையாட்டு, உண்மை அல்லது பொய் விளையாட்டு என்று சொன்னால், அதற்கான விளையாட்டை பயனர்களுக்காக வழங்கும்.
மேலும், ஊரடங்கின் போது செய்யவேண்டிய யோகாசனம், வீட்டு விளையாட்டு, உணவு தயாரிப்பு முறைகளையும் எந்த சலிப்பும் இல்லாமல் நமக்கு அளிக்கும் என்ற உறுதிமொழியை அமேசான் நிறுவனம் அளித்துள்ளது.